டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் கைகோர்த்த ரிலையன்ஸ் : சிசிஐ ஒப்புதல்!

இந்தியா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஊடக பிரிவு மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்களின் இணைப்பிற்கு இன்று (ஆகஸ்ட் 28) இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊடக பிரிவை வால்ட் டிஸ்னியுடன் இணைத்து புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கான ஒப்புதலைப் பெற இந்தியப் போட்டி ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இந்த இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கவிருக்கும் புதிய நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, இந்த துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று இந்தியப் போட்டி ஆணையம் அவர்களிடம் தெரிவித்திருந்தது. இதற்கு அந்த இரு நிறுவனங்கள், அப்படி ஆகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க தயார் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தான், இந்தியப் போட்டி ஆணையம் இந்த இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உருவாக இருக்கும் புதிய நிறுவனத்தின் 63.16% பங்கு ரிலையன்ஸிடம் இருக்கும், மீதமுள்ள 36.84% பங்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம் இருக்கும்.

மேலும், இந்த நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இருப்பார். துணைத் தலைவராக வால்ட் டிஸ்னியில் இருந்த உதய் சங்கர் இருப்பார்.

இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையில் நெட்ஃபிளிக்ஸ், சோனி, ஹாட்ஸ்டார், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்குள்ளே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இணைப்பு மற்ற நிறுவனங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த புதிய நிறுவனத்தில் ரூ.11,500 கோடி முதலீடு செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விஜய்யின் ‘கோட்’… 3 மணி நேரம் ஓடும் படமா?

பொன் மாணிக்கவேல் கைது?: சிபிஐ தீவிரம்!

மாணவர்கள் போராட்டம் எதிரொலி : இழுத்து மூடப்பட்ட அரசு கல்லூரி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *