புதன்கிழமை வர்த்தக அமர்வில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் சென்செக்ஸ் 285 புள்ளிகள் உயர்ந்து 81,741ல் புள்ளியிலும் நிஃப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 24,951 புள்ளியிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் BSEல் Maruti Suzuki India, JSW Steel, Asian Paints, NTPC உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தையும் Reliance, Mahindra & Mahindra, Infosys உள்ளிட்ட நிறுவனங்கள் நட்டத்தையும் சந்தித்தன.
புதன்கிழமை வர்த்தகத்தில் BSEல் ஹெல்த்கேர் இன்டெக்ஸ் குறியீடு 1 சதவீதம் உயர்ந்து 40,583 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தை எட்டியது. Unichem Laboratories, Granules India, Ajanta Pharma, Jubilant Pharmova, Wockhardt, Gland Pharma and SMS Pharmaceuticals உள்ளிட்ட ஃபார்மா துறை சார்ந்த நிறுவன பங்குகள் 5 முதல் 8% வரையும் Zydus Lifesciences, Glenmark Pharmaceuticals, Aurobindo Pharma, Torrent Pharmaceuticals and Sun Pharmaceutical Industries நிறுவன பங்குகள் 2 முதல் 3% வரை உயர்ந்து லாபத்தைக் கொடுத்தன.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்கு விலை இன்ட்ராடேவில் 3.12 சதவீதமும்,எஸ்பிஐ லைஃப் பங்கு விலை 2.2 சதவீதம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் 2 சதவீதம், பொதுத்துறை நிறுவனமான மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் 0.4 சதவீதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன.
அதானி குழும நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 789.63 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 1,135.46 ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை அதானி நிறுவனம் கையகப்படுத்தியது.
M&M நிறுவனம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாயை ஒப்பிடுகையில் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வருவாய் 27,132.8 கோடியை ஈட்டியதாக தெரிவித்த நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்) பங்கு புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் வரை உயர்ந்து பங்கு விலை 2,979.90 வரை உயர்ந்தது வர்த்தக முடிவில் பங்கு ஒன்று 2,907.80 ரூபாயில் முடிவடைந்தது.
ZEE என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் வளர்ச்சியடைந்து 2,149.52 கோடியை ஈட்டியதாகவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய 1,998.26 கோடியை ஒப்பிடுகையில் இது 7.6% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதன் கிழமை ZEE Entertainment பங்கு 2.42% உயர்ந்து 148.67 ரூபாயில் முடிவடைந்தது.
Titagarh Rail Systems நிறுவன பங்கு 7.91 சதவீதம் சரிந்து ஒரு பங்குக்கு 1,548.95 ரூபாய் என்கிற குறைந்தபட்ச விலைக்கு சென்றது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 4% சதவீதம் குறைந்ததாக தெரிவித்த நிலையில் நேற்று இதன் பங்கு சரிவை சந்தித்து.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றம் ஏதும் செய்யாமல் 5.25 சதவிகிதம் – 5.50 சதவிகிதம் மதிப்பீடுகளே தொடரும் என்று தெரிவித்துள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் Meta மற்றும் Apple, Amazon.com நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் நிதிநிலை அறிக்கையை வெளியிட உள்ளதால் அமெரிக்க பங்குச் சந்தை நாஸ்டாக் 2.64 சதவீதம் உயர்ந்தது.
செப்டம்பர் வட்டி விகித விலை கட்டுப்பாடு காரணமாக ஆஸ்திரேலிய சந்தை ASX 200 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதேநேரத்தில் ஜப்பான் நிக்கி 2.26% சரிவை சந்தித்து.
ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை காலை முதல் அமர்வில் நிஃப்டி புதிய சாதனையுடன் 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து உயர்வுடன் தொடங்கியது. முறையே சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 81949 புள்ளிகளில் தொடங்கியது.
Aditya Birla Capital, Adani Enterprises, Adani Ports and Special Economic Zone, Akzo Nobel India, Alkyl Amines Chemicals, Adani Transmission, Bajaj Steel Industries, Bharat Wire Ropes, Dabur India, Datamatics Global Services, Diamond Power Infrastructure, Emami, Escorts உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று வியாழக்கிழமை முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இன்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!
வயநாடு நிலச்சரிவு : முண்டக்கை பகுதிக்கு விரையும் மீட்பு படை… பலி எண்ணிக்கை 276ஆக உயர்வு!