மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, தடுப்பு அணைகள் கட்டுதல், கிராம குளங்கள், ஊரணிகள், கோவில் குளங்கள், சிறு பாசன தொட்டிகள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை மீட்க ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்வார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்ப்பையும் கண்காணிப்பு அலுவலர்கள் தருவார்கள்.
11 மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் யார் யார்?
திருப்பத்தூர் – விஜயகுமார், ஐ.ஏ.எஸ்.,
திண்டுக்கல் – பிரஜேந்திர நவ்னித், ஐ.ஏ.எஸ்.,
சென்னை- ஜெயஸ்ரீ முரளிதரன், ஐ.ஏ.எஸ்.,
திருவண்ணாமலை – எஸ்.மதுமதி, ஐ.ஏ.எஸ்.,
தூத்துக்குடி – வீர ராகவ ராவ், ஐ.ஏ.எஸ்.,
கள்ளக்குறிச்சி – தர்மேந்திர பிரதாப் யாதவ், ஐ.ஏ.எஸ்.,
திருப்பூர் – டாக்டர் எம்.வள்ளலார், ஐ.ஏ.எஸ்.,
கோவை – நந்தகுமார், ஐ.ஏ.எஸ்.,
புதுக்கோட்டை – இ.சுந்தரவல்லி, ஐ.ஏ.எஸ்.,
நாமக்கல் – எம்.ஆசியா மரியம், ஐ.ஏ.எஸ்.,
நாகை – டாக்டர் சி.என். மகேஸ்வரன், ஐ.ஏ.எஸ்.,
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வயநாடு நிலச்சரிவு : முண்டக்கை பகுதிக்கு விரையும் மீட்பு படை… பலி எண்ணிக்கை 276ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவு : கேரளாவுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி செய்த விக்ரம்