ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் பயணமா? சிறப்பு ரயில்கள் ரெடி… லிஸ்ட் பாருங்க… சற்று நேரத்தில் முன்பதிவு!

Published On:

| By Mathi

Ayudha Pooja Special Trains

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்–கொல்லம், சென்னையை கடந்து செல்லும் சார்லபள்ளி–நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை எழும்பூர்–கொல்லம் மற்றும் சார்லபள்ளி–செங்கோட்டை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 23) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் – கொல்லம் (கேரளா)

ரயில் எண் 06121 சென்னை எழும்பூர்–கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம் வழியாக கொல்லம் சென்றடையும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கொல்லம் (கேரளா) – சென்னை சென்ட்ரல்

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06122 கொல்லம்–டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலும் 5 சேவைகளாக இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் – கொல்லம் (கேரளா)

ரயில் எண் 06117 சென்னை எழும்பூர்–கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படுகின்றன.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06118 கொல்லம்–சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலும் 5 சேவைகளாக இயக்கப்படுகிறது.

சார்லபள்ளி (தெலுங்கானா) – நாகர்கோவில்

தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கியமான வகையில் ரயில் எண் 07535 சார்லபள்ளி–நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

சார்லபள்ளியில் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்குப் புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை அடைந்து, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 07536 நாகர்கோவில்–சார்லபள்ளி சிறப்பு ரயில் செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 4, 11, 18, 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் நள்ளிரவு 12.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதுரைக்கு அதிகாலை 4.35 மணி, திண்டுக்கல்லுக்கு 5.35 மணி, திருச்சிக்கு 6.40 மணி, சென்னை எழும்பூருக்கு நண்பகல் 12.05 மணிக்கு வந்து, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும். ஹைதராபாத் செல்லும் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தலாம்.

சார்லபள்ளி (தெலுங்கானா) – செங்கோட்டை

தென் மாவட்ட பயணிகளுக்காக 07191 சார்லபள்ளி–செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபர் 2, 9, 16, 23, 30 மற்றும் நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மொத்தம் 9 சேவைகள் இயக்கப்படுகின்றன.

சார்லபள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இந்த ரயில் நல்கொண்டா, மிரியால்குடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

தமிழகத்தில் பழனிக்கு காலை 8.10 மணி, ஒட்டன்சத்திரத்திற்கு 8.35 மணி, திண்டுக்கல்லுக்கு 9.15 மணி, மதுரைக்கு 10.20 மணி என புறப்பட்டு, தென்காசிக்கு பிற்பகல் 1.15 மணிக்கு வந்து, செங்கோட்டையை பிற்பகல் 2 மணிக்கு அடையும்.

மறுமார்க்கத்தில் 07192 செங்கோட்டை–சார்லபள்ளி சிறப்பு ரயில், அக்டோபர் 3, 10, 17, 24, 31 மற்றும் நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் அதிகாலை 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும். மொத்தம் 9 சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 23) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

எர்ணாகுளம் (கேரளா)- பாட்னா (பீகார்)

ரயில் எண் 06085 எர்ணாகுளம்–பாட்னா சிறப்பு ரயில், அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளத்தில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, நான்காவது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா சென்றடையும். ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06086 பாட்னா–எர்ணாகுளம் சிறப்பு ரயில், அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

போத்தனூர் – பரவுனி (பீகார்)

ரயில் எண் 06021 போத்தனூர்–பரவுனி சிறப்பு ரயில், அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

போத்தனூரில் காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 1.30 மணிக்கு பரவுனி சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட தமிழக ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் 06022 பரவுனி–போத்தனூர் சிறப்பு ரயில், அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4 ஆகிய புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் – மதார் (ராஜஸ்தான்)

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 06013 திருவனந்தபுரம் சென்ட்ரல்– ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள மதார் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் அக்டோபர் 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய புதன்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் காலை 7.45 மணிக்குப் புறப்படும். மூன்றாவது நாள் காலை 11 மணிக்கு மதார் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06014 மதார்–திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 24, 31 மற்றும் நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share