சேகர் ரெட்டி வீட்டில் ரூ.1 கோடி நகை, ரூ.50 லட்சம் பணம் கொள்ளை : 2 பேர் கைது!

Published On:

| By Kavi

காட்பாடியில் பிரபல தொழிலதிபர் வீட்டில் தங்க, நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் விருதம்பட்டு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது.

ADVERTISEMENT

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினரான இவர் அரசியல் பின்புலம் கொண்டவர்.

சமீபத்தில் இவரது மகள் திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த சூழலில் இவரது வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

திருமண சமயத்தில் அவர்களது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சேகர் ரெட்டி குடும்பத்தினர் வெளியில் சென்று வந்துள்ளனர்.

இதை பயன்படுத்தி அவரது வீட்டில் பணிபுரியும் மகாலட்சுமி மற்றும் அவரது மகள் ராணி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர்களை கைது செய்திருக்கும் போலீசார் மேலும் 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான மூன்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையில் சில நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share