சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!

Published On:

| By Prakash

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும், ‘நான் மிருகமாய் மாற’ படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் ’கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கி வரும் படம் ‘நான் மிருகமாய் மாற’. இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராகவும், கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும் சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 17) தெரிவித்திருப்பதுடன் இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படம் முதலில் ‘காமன் மேன்’ என்ற தலைப்பில் உருவாகி வந்தது. பின்பு இந்த தலைப்பை ஏற்கெனவே ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் முறையாக பதிவு செய்துள்ளதால் இப்போது ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக வேண்டுமா?

அன்பில் மகேஷை வரச் சொல்லு: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share