விருதுநகரில் ராதிகா வெற்றிபெற வேண்டி, கோயிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக – தேமுதிக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டனர். இதனால் விருதுநகர் ஸ்டார் தொகுதியாக உள்ளது
இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த இடத்தில் தேமுதிகவும், மூன்றாவதாக பாஜக வர வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் தனது மனைவியும், பாஜக வேட்பாளருமான ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் கோயிலில் வழிபாடு செய்தார்.
தனது மனைவிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும் நடிகர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார்.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்த நிலையில், அவரையும் ராதிகா சரத்குமாரையும் காண அப்பகுதி மக்களில் கோயிலில் குவிந்தனர்.
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது வெற்றிக்காகவும், மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
NAM vs OMAN: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நமீபியா
T20 World Cup 2024: மேற்கிந்திய தீவுகளுக்கு தோல்வி பயத்தை காட்டிய பப்புவா நியூ கினியா