சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Published On:

| By Minnambalam

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி இன்று (பிப்ரவரி 10 )அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். மேலும், மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 10 ) புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

மோடி ஆவணப்பட வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

பிரபாஸுக்கும் – கிருத்தி சனோனுக்கும் திருமணமா?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share