தளி ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதியில் போட்டியிட வலது கம்யூனிஸ்ட் வாய்ப்பளித்துள்ளதைக் கண்டித்து ராஜன் குறை, பத்ரி சேஷாத்ரி போன்றவர்களின் முகநூல் பதிவும், தமிழ் ட்விட்களும் இன்றைய அப்டேட் குமாரில்!
// @skpkaruna
வார்த்தைக்கு வார்த்தை திரு.கருணாநிதி என முதல்வர் முழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. தனக்கு வயதாகி சிரமம் வரும்போதுதான் வயதின் அருமை புரிகிறது.//
// @vandavaalam
விஜயகாந்த் பேச்சிற்கு கைதட்டி, விசிலடிப்பவர்களை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. ஐக்யூ அளவு 250க்கு மேல் இருக்கலாம்.//
// @su_boss2
நஷ்டத்தை ஈடுகட்ட வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி -விஷால்#வேலைக்காரனோட முடிச்சிக்கலாம்னு தோட்டத்து பக்கம் ஒதுங்குனா தோட்டக்காரனும் பாத்துட்டான்…//
// @Green_Tamil
தொழிலாளர் விரோத புதிய பி.எப். திட்டத்தையே ரத்து செய்யவைத்துள்ளது பெங்களூர் தொழிலாளர் போராட்டம்.. தமிழன் வீண் பெருமை பேசத்தான் லாயக்கு//
// @iVenpu
அந்தம்மா இட்லி வித்ததை சாதனையா பேசுது”ன்னு சிரிச்சவனுங்கதான் இப்ப “இவர் டீக்கடையில போயி டீ குடிக்குறாரு”ன்னு சிலாகிக்குறானுங்க. ஃபன்னி கைஸ்//
// @Eswari67
நட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்துக்கு தமிழக மக்களே காரணம்-விஷால்
எங்களை நம்பி. உன்னைய யாருயா கிரிக்கெட்டுலாம் நடத்தச் சொன்னது என் டொமேட்டோ //
//@GowrisankarGuna
நஷ்டத்தை ஈடுகட்ட வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி – விஷால்..!!
உள்ளூர்ல கந்தலானது பத்தலன்னு, வெளியூர்ல கண்டமாக போறாங்கபோல..!!
// @akil_appa
போன சட்டமன்றத் தேர்தலில் வடிவேலு. இந்த தேர்தலில் வைகோ. //
.
#பன்னி_கைஷ்..!!//
//@i_rajtuty
நாம் ஜெர்மானியர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அடால்ஃப் ஹிட்லருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! //
**************************************************************************************************
// Rajan Kurai Krishnan
28 mins ·
எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றிக்கொண்டுள்ளன. இவ்வளவு பரவலான எதிர்ப்புக்குப் பிறகும் சி.பி.ஐ. தளி ராமச்சந்திரனை ஏன் மாற்றாமல் இருக்கவேண்டும் என்று புரியவில்லை. முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. //
//Badri Seshadri
1 hr ·
தளி ராமச்சந்திரன் பெயர் ரிப்பேராகி, கொலைக் குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகியிருக்கும்போது அவரைக் கட்டாயமாக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தூண்டியிருப்பது எது? அசிங்கம்…//
//சிவா இசக்கி feeling irritated.
11 mins ·
எங்கு பார்த்தாலும் தமிழனுக்கு ஓட்டளி, தெலுங்கனுக்கு ஓட்டளிக்காதே, மலையாளிக்கு ஓட்டளிக்காதே! கன்னடனுக்கு ஓட்டளிக்காதே! எனக் கூச்சல் முகநூலில்.
ஏன்? எல்லா தமிழனும் நல்லவனா இல்லை எல்லா தெலுங்கனும் கெட்டவனா?!!!
இன்றைய இளைஞர்களான எங்களுக்கு இனம், சாதி எல்லாம் ஒரு காரணி கிடையாது முட்டாள்களே! வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்! அதிகமாக இருக்கும் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடுங்கள்!
உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தித் தொலையுங்கள்!
மனசாட்சியோடு நேர்மையாக ஆட்சி புரியுங்கள் … இதைச் செய்பவர் உம்மன் சாண்டியாக, அரவிந்த் கெஜ்ரிவாலாக, ஏன் மிசோரம்காரனாக இருந்தால்கூட நாங்கள் ஓட்டு போடுவதற்குத் தயாராக இருக்கிறோம். //,”









