பெண்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி… உழைக்கும் மகளிருக்கு விடுதி!

Published On:

| By Kavi

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியத்தரப்பினரில் ஒரு பகுதியான பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என  இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்ததை குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன்

தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன், மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக, பெண்கள் அதிகளவில் வேலையில் சேர்வதற்கு அரசு உதவி செய்யும்.

பெண்களுக்கென திறன்மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதுடன், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் உதவி செய்யப்படும் என அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பட்ஜெட்டில் இடம்பெறாத தமிழ்நாடு : தலைவர்கள் கண்டனம்!

அரசு தரும் ஒரு மாத ஊதியம், இன்டர்ன்ஷிப்… இளைஞர்களுக்கு ஜாக்பாட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share