இம்முறை ‘தேவா’-வாக ரஜினி… ‘கூலி’ படம் அப்டேட்!

Published On:

| By Kavi

‘ஜெயிலர்’ படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை சந்தித்ததை தொடர்ந்து, சூப்பர்-ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார்.

இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிகாந்துடன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கூலி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணைந்தார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் அவர்களின் கதாப்பாத்திரங்கள் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களாகவே வெளியிட்டு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர்-ஸ்டார் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதேபோல, பிரபல மலையாள நடிகர் சவ்பின் சாஹிர் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கன்னட நடிகர் உபேந்திராவும் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், சத்யராஜ் (ராஜசேகர்) மற்றும் ஸ்ருதி ஹாசன் (ப்ரீத்தி) ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

‘வேட்டையன்’ படத்திற்கு இசையமைத்த அனிருத்தே, இந்த ‘கூலி’ படத்திற்கும் இசையமைக்க உள்ளார் .

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும் இணைந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி, சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு இப்படத்தில் இணைந்துள்ளதால், ‘கூலி’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாகவே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

Paris Paralympics 2024: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’!

வேலைவாய்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share