இந்தியன் ரயில்வே 96 சதவிகிதம் மின்மயம்… டீசல் இன்ஜின்கள் என்ன ஆகும்?

Published On:

| By Kumaresan M

இந்திய ரயில்வேயில் 96 சதவிகிதம்  பாதை  மின்மயமாக்கப்பட்டு விட்டதால்,  டீசல் என்ஜின்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இந்திய ரயில்வேயில் 1925 ஆம் ஆண்டு மும்பையில் முதன் முதலில் 16 கி.மீ தொலைவுக்கு மின்வழி பாதை ஏற்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு , நாடு முழுவதும் மின்வழி பாதை ஏற்படுத்தும் பணிகள் பரவலாக செய்யப்பட்டு விட்டது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, இந்த வேகம் இன்னும் அதிகாரித்தது.

ADVERTISEMENT

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை  46,425 கோடி செலவில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, 4 சதகிவித ரயில் பாதையே மின் மயமாக்கப்பட வேண்டியது உள்ளது. இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே முற்றிலும் மாசு ஏற்படுத்ததாத பசுமை  நிறுவனமாக மாறி விடும். உலகில் சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே 99 சதவிகிதம் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100 சதவிகிதம் மின் மயமாக்கப்பட்டு விட்டால், டீசல் இன்ஜின்களுக்கு இனிமேல் வேலை குறைந்து விடும். இந்த டீசல் இன்ஜின்களை தேவைப்படும்  ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய ரயில்வேயில் 4,543 டீசல் இன்ஜின்கள் உள்ளன. இவை, நமது நாட்டு அகல பாதைக்கு ஏற்றபடி 1.6 மீட்டர் அகல தண்டவாளத்தில்  பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. ஆனால், ஆப்பிரிக்க பாதைகள் 1.06 அகலமே கொண்டவை. இதனால், அந்த நாட்டுக்கு ஏற்றபடி இன்ஜின் ஆக்ஸில்களை  மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

ADVERTISEMENT

இந்த இன்ஜின்கள் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சித்தரஞ்சன் இன்ஜின்  தொழிற்சாலையில்  மாற்றி வடிவமைத்து ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ADVERTISEMENT

 திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!

“இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டது இல்லை” : மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share