நடிகர் சூரி உணவகத்தில் திடீர் சோதனை!

Published On:

| By christopher

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் நேற்றிரவு சோதனை நடத்திய வணிக வரித்துறையினர், சூரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் இவர் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

சூரி தனது சொந்த ஊரான மதுரையில் பல்வேறு இடங்களில் ’அம்மன் உணவகம்’ என்ற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார்.

மதுரையில் காமராஜர் சாலை, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிக்குளம் ஆகிய பகுதிகளில் இந்த ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் வணிகவரித் துறையினர் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர்.

மேலும் உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் அதிகாரிகள் விசாரித்தனர்.

ADVERTISEMENT

சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அம்மன் உணவகத்தின் மீதான புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் சூரிக்கு உத்தரவிட்டு சென்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுல் காந்தியுடன் இணைந்த சச்சின் பைலட்

ஆஸ்கர் அகாடமி விருதுக்கு தேர்வான குஜராத் படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share