ADVERTISEMENT

ஆஸ்கார் அகாடமி விருதுக்கு தேர்வான குஜராத் படம்!

Published On:

| By Kavi

ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. டி. எஸ். நாகபரணா தலைமையிலான 19 பேர் கொண்ட தேர்வு குழு தேர்வு செய்துள்ளது.

ஆஸ்கார் அகடாமி விருது போட்டிக்கு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இருந்தும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில்

ADVERTISEMENT

இந்தியில் இருந்து

1.பதாய் தோ 

ADVERTISEMENT

2.ராக்கெட்ரி நம்பி

3.ஜுண்ட் 

ADVERTISEMENT

4.பிரம்மாஸ்திரம் 

5.தி காஷ்மீர் ஃபைல்ஸ் 

6.அனெக் 

அசாம் மொழியில் இருந்து

1.திமாசா செம்கோர் 

தமிழில் இருந்து

1.இரவின் நிழல் 

குஜராத்தியில் இருந்து

1.செலோ ஷோ

தெலுங்கு மொழியில் இருந்து

1.ஆர்ஆர்ஆர் 2.ஸ்தலம் 

மலையாளத்தில் இருந்து

1.அரியுப்பு 

பெங்காலியில் இருந்து

1.அபராஜிதோ 

ஆகிய படங்கள் பங்கேற்றுள்ளன.

இந்தப்படங்களில் இருந்து அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் போட்டியிடும் இந்திய திரைப்படமாக பிரதமர் நரேந்திர மோடியின் தாய் மொழியான குஜராத்தி மொழியில் தயாராகியுள்ள ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை  தேர்வு செய்துள்ளது. 

Oscar Academy Award

‘செலோ ஷோ’வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது என கூறியுள்ளது தேர்வுக்குழு.

பேன் நலின் என்ற இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படம் 9 வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் பவின் ராபரி, பவேஷ் மலி, ரிச்சா மீனா, திபேன் ராவல், பர்வேஸ் மேத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இயக்குநரான பேன் நலின் ஏற்கெனவே ‘Angry Indian Goddesses’, ‘Samsara’ and ‘Valley of Flowers’ ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.

ஒரு 9 வயது எளிய கிராமத்து சிறுவனின் சினிமா மீதான காதல் பற்றி யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது.

Robert DeNiro’s Tribeca Film Festival-ல் முதல் திரைப்படமாக இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 66th Valladolid Film Festival-ல் தங்க விருதினை இந்தப் படம் பெற்றது.

இத்திரைப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 95-வது ஆஸ்கர் அகடாமி விருது போட்டிக்கு இந்தியா சார்பில் இந்தப் படம் அனுப்பப்படுவதாக இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப இந்தாண்டு வணிகரீதியாக வெற்றிபெற்ற குறிப்பாக ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, விவேக் அக்னி ஹோத்ரியின் ‘காஷ்மீர் பைல்ஸ்’ ஆகிய படங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

ஆனாலும், இறுதியில் ‛செல்லோ ஷோ’ படம் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

கரகாட்டக்காரனை மீட்டெடுப்பாரா ’சாமான்யன்’ ராமராஜன்?

சனாதனம்: ஆ.ராசாவுக்கு திருப்பதி நாராயணன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share