ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார் கமல் : சைமா விருது!

Published On:

| By Kavi

ஒரிஜினல் பான் இந்தியா நட்சத்திரம் என்ற சைமா விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

திரையுலகினருக்கு வழங்கப்படும், 2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ், இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என பல்வேறு பட்டியலின் கீழ் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து தயாரித்திருந்த இந்த திரைப்படம், ஓடிடி தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியான பின்னரும், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது.

ADVERTISEMENT

அனைத்து மொழி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தான், கமல்ஹாசனுக்கு இந்த விருதை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

கார் வியாபாரத்தை விட சினிமா மோசமாகிவிட்டது : ராதாரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share