ராகுல் காந்தி குண்டுகட்டாக கைது: மூக்கில் ரத்தக் கசிவு!

Published On:

| By Kavi

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி போலீசார் லத்தி சார்ஜ் செய்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (ஜூலை 21) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் சுதீஷன் உள்ளிட்டோர் பிரதமர் இல்லம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தசூழலில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

சாலையில் படுத்து வர மறுத்த ராகுல் காந்தியின் கை கால்களை பிடித்து தூக்கி சென்றனர். அப்போது அவர், “ஜனநாயகம் இப்படிதான் இந்தியாவில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை போலீசாரும் துணை ராணுவ படையினரும் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், ராகுல் காந்தியின் மூக்கில் அடிபட்டு ரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்தசூழலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share