‘போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்’ மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல்

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Jun 2026, 4:47 PM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்:

ADVERTISEMENT

“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு வாழ்த்துத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தனது நன்றியைத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில் “பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. நமது அரசமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பதற்கான நமது உறுதிப்பாடு என்றும் தொடரும். நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் இது; வெற்றி பெறும் வரை நாம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel