உதயநிதியை கைது செய்வதா? ‘ஜனநாயக படுகொலை’ -ஆர்.எஸ். பாரதி கண்டனம்

Published On:

| By Mathi

R.S. Bharathi Condemns Udhayanidhi's Arrest

திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய முயற்சிப்பது திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு ஆர்.எஸ். பாரதி அளித்த பேட்டி: தஞ்சாவூரில் நேற்று திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து முதல்வர் விஜய்யால் ஜீரணிக்க முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ADVERTISEMENT

தமிழ்நாட்டினுடைய நலனை கருதியும், விவசாய பெருமக்களுடைய நலனை கருதியும் ஆக்கபூர்வமான குற்றச்சாட்டுக்களை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அவருடைய பேச்சில் எந்தவிதமான உள்நோக்கமும் குற்றமும் அவதூறும் இல்லை என்பது அத்தனை பேருக்குமே தெரியும். ஆனால் திட்டமிட்டு நாளை சட்டசபை கூடும் நிலையில், அவரை சட்டசபைக்கு வரவிடாமல் தடுக்க நினைக்கின்றனர்.

சட்டசபையிலும் முதல்வர் விஜய் ஆடிய நாடகத்தை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக, சட்டசபை நாளை நடைபெறும் நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக உதயநிதியை கைது செய்வது என்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.

ADVERTISEMENT

தமிழ்நாட்டு மக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தினார். 5 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவிரியின் உரிமைகள் முழுமையாக கிடைத்தது.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போடுங்கள். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்காக கைது என்பது பழிவாங்கும் செயல். கடந்த காலத்தில் இப்படி செய்தவருடைய நிலை என்ன என்பதை இன்றைய ஆட்சியாளர் புரிந்து கொள்ள வேண்டும். முதன்முறையாக ஒரு தவறான முன் உதாரணத்தை இன்றைக்கு இந்த அரசு செய்கிறது. நீதிமன்றம் தான் இதில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share