இந்தியாவில் 59,830 கோடீஸ்வரர்கள்!

By Balaji

|

Published on 21 Dec 2017, 12:00 AM

தனிநபர் வருமானமாக ரூ.1 கோடிக்கு மேல் கொண்டுள்ள இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் 59,830 ஆக உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2014-15 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான விவரங்கள் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் கணக்கிடப்பட்டு வருமான வரித் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முந்தைய ஆண்டை விட 23.5 சதவிகித உயர்வுடன் 59,830 பேர் 1 கோடிக்கும் மேல் வருமானம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடியாகும். முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான 2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டின் கோடீஸ்வரர்கள் பற்றிய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 48,417 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

தங்களது வருமானத்துக்கு ஏற்ப செலுத்தப்படும் வரியைக் கொண்டு இவ்விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை. 2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் 3.65 கோடிப் பேர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் 1.37 கோடிப் பேர் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாக இருந்தனர். மேலும், வரி செலுத்தியவர்களின் மொத்த வருமானம் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.21.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அது ரூ.18.41 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel