மக்கள் நலக் கூட்டணியோடு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினோம். வாசனும் பேசிவருவதாக சொன்னார். அவரைத்தவிர வேறு யாருக்கும் என்ன பேசினார், என்ன நடந்தது என்று தெரியாது. கூட்டணி ஏற்படவில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி எங்களுக்கு ஏற்புடையதல்ல. மூப்பனார் எந்த முடிவையும் மூத்த நிர்வாகிகளை கலந்துதான் எடுப்பார். ஆனால், வாசன் முடிவு அப்படியானதல்ல. நினைத்தேன்; கவிழ்த்தேன் என்று எந்தக் கூட்டணியையும் அமைக்கமுடியாது. விரைவில் ஜெயலலிதாவைச் சந்திக்க இருக்கிறேன். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர நினைக்கிறேன். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமையுமா என்ற யூகங்களுக்கு பதில் சொல்லமுடியாது’ என்றார்.
அதிமுகவில் தமாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்?
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








