புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து நாளை புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
