திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (அக்டோபர்25) அதி கனமழை பெய்யக் கூடும் என வானில ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம் என்ன?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
