சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் மேற்கொள்ளப்படும் மழை மேகக் கண்காணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை ரேடார் செயல்பாடு நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை மேகங்களின் நகர்வு, மழையின் தீவிரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் வானிலை ரேடார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதே நேரத்தில் செயற்கைக் கோள் படங்கள் மற்றும் பிற வானிலை ஆய்வுக் கருவிகள் மூலமும் வானிலை கண்காணிப்பு மேற்கொள்ள முடியும் என்கின்றனர் வானிலை வல்லுநர்கள்.
