பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைக்குறைவால் இன்று காலமானார்.

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் செஃப் தாமு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தாமுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

ADVERTISEMENT

தமிழகத்தில் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் செஃப் தாமு எனப்படும் கோதண்டராமன் தாமோதரன். விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

சமையல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார். இவரது சமையல் கலைச் சேவையைப் பாராட்டி மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

ADVERTISEMENT

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் செஃப் தாமு காலமானதாக வதந்தி பரவியது. அப்போது தாமுவே வீடியோ வெளியிட்டு, தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்திருந்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share