முதல்வர் விஜய்யின் 2-வது செயலாளராக பணியாற்றும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ், ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலராக முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலர் கூடுதல் பொறுப்பு அமுதா ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டிருந்தது. கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையுடன் அமுதா ஐஏஎஸ், முதல்வரின் முகவரி துறையையும் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய் அலுவலகத்தில் அவரது அன்றாட நிகழ்வுகள் மற்றும் கோப்புகளை கவனித்து வந்தார் லட்சுமி பிரியா ஐஏஎஸ் . இந்நிலையில் ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலர் ”முழு கூடுதல் பொறுப்பு” லட்சுமி பிரியா ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
