500 பெண்களின் வீடியோக்கள்… புதுவை டூ ஒடிசா… மன்மத ராசாவை தட்டித்தூக்கிய போலீஸ்!

Published On:

| By vanangamudi

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் நாயக்கை புதுவை போலீசார் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். puducherry police arrested sexual abuser

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் மேட்டுப்பாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஒடிசாவை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் புகாரில், “ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்னுடன் நெருக்கமாக பழகி, எனக்கு தெரியாமல் போட்டோ, வீடியோக்கள் எடுத்திருக்கிறார். அந்த வீடியோக்களை என் உறவினர்கள் மற்றும் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அனுப்பி அவரது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பிரகாஷ் நாயக்கை பிடிக்க எஸ்.பி பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, எஸ்.ஐ சந்தோஷ் உள்பட 10 பேர் கொண்ட டீம் விசாரணையில் இறங்கியது.

ADVERTISEMENT

சைபர் கிரைம் போலீசார் தன்னை நெருங்காத அளவுக்கு தந்திரமாக செயல்பட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் பிரகாஷ். இதனால் 55 நாட்களாகியும் அவர்களால் பிரகாஷை நெருங்கவே முடியவில்லை.

ஆனால், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் பிரகாஷின் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக அவரது நெட்வொர்க்கை அலசி ஆராய்ந்தனர். போலீசுக்கு தண்ணி காட்டிய பிரகாஷ், கடைசியாக ஒடிசாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, சைபர் கிரைம் போலீசார் புதுவையில் இருந்து சிவில் உடையில் ஒடிசாவுக்கு விரைந்தனர். அப்போது பாலசோரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த பிரகாஷை கையும் களவுமாக பிடித்தனர்.

இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,

“தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக பணம் சம்பாதித்து வருகிறார் பிரகாஷ். இவரிடம் வேலை தேடி வரும் பெண்களிடமும், இஸ்டா, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பெண்களிடம் கவர்ச்சிகரமாக பேசி அவர்களை மயக்கி வலைவிரித்துள்ளார்.

தொடர்ந்து அந்த பெண்களை தனியார் விடுதிகளுக்கு அழைத்து சென்று படுக்கையில் இருக்கும் புகைப்படம், வீடியோ, பாத்ரூம்களில் குளிக்கும் வீடியோக்கள் என 500-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்களை தனது மொபைல் போனில் வைத்துள்ளார். இந்த மொபைல் போனில் உள்ள வீடியோக்கள், புகைப்படங்களை ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.

புதுவையில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் பிரகாஷ் தனது லீலைகளை காட்டியுள்ளார். பல பெண்கள் போலீசிடம் புகார் கொடுக்க முன் வராததால் இதையே தனக்கு சாதகமாக வைத்துள்ளார்” என்றனர்.

அவர்களிடம் குறுக்கிட்ட நாம், “புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறிப்பாரா?” என்று கேட்டோம்.

“பணமெல்லாம் பறிப்பதில்லை. பெண்களை தனது ஆசைக்கு இணங்க வைத்து மிரட்டி வற்புறுத்துவார். அவர் கூப்பிடும் இடத்திற்கு வர சொல்வார். இப்படி தான் பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்” என்றனர்.

எப்படி இவரை ட்ரேஸ் செய்து கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டபோது, ” புகார் பெற்று கடந்த 55 நாட்களாக மூன்று மாநிலங்களில் தேடினோம். இவரது நெட்வொர்க்கை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருவழியாக கஷ்டப்பட்டு பிரகாஷை நெருங்கினோம்.

அவரை பிடிக்கப் போகும்போது எங்களை மிரட்டினார். பின்னர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். ஒருகட்டத்தில் தப்பி ஓட முயற்சித்தார். இதையெல்லாம் சமாளித்து ஒடிசா மாநில போலீசார் உதவியுடன் பிரகாஷை கைது செய்தோம். பின்னர் மேஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியபோது, ‘புதுச்சேரிக்கு சென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் அங்கு செல்ல மாட்டேன்’ என போராட்டம் செய்தார்.

இதையெல்லாம் சரிகட்டி விமான டிக்கெட் புக் செய்து காலதாமதம் செய்யாமல் பிரகாஷை புதுவைக்கு அழைத்து வந்தோம். puducherry police arrested sexual abuser

பெண்களின் வாழ்க்கையை ஏன் சீரழித்தாய்? எத்தனை பெண்களை இதுவரை ஏமாற்றினாய்? என்று கேட்டபோது, பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்.

பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பார்ப்பது எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது. அதை என்னால் விட முடியவில்லை. நான் எங்கே போகிறேனோ அங்கிருந்து அங்கு ஒரு பெண்ணை புகைப்படம் எடுத்து வைத்திருப்பேன். அவர்களை ஆசைக்கு இணங்க அழைப்பேன். இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் அந்த பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டுவேன். இதை தவிர நான் யாரிடமும் பணம் பறித்ததில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். பிரகாஷை போலீசார் அவர்களது பாணியில் கவனித்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்” என்றனர். puducherry police arrested sexual abuser

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share