ADVERTISEMENT

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 17 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

17 Killed in Firecracker Factory Accident Near Virudhunagar

விருதுநகர் அருகே வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் வனஜா பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆலையில் 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. விபத்தின் போது பணியில் இருந்த 17 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share