கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரளாவில் இருந்து 16 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று (ஏப்ரல் 17) வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்றனர். எதிர்பாராத விதமாக சுற்றுலா வேன் 13 ஆவது கொண்டை ஊசி வளையில் திரும்பும் போது தடுப்புச் சுவரில் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
