பாண்டிச்சேரி ‘சென்டாக்’ (CENTAC) மெகா அறிவிப்பு! நீட் இல்லாமலேயே டிகிரி

Published On:

| By Santhosh Raj Saravanan

puducherry centac ug non neet admission 2026 online application details

புதுச்சேரி சென்டாக் (CENTAC 2026) நிர்வாகம் ஒரு மெகா ‘நான்-நீட்’ (Non-NEET) ஜாக்க்பாட் அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. புதுச்சேரி, காரைக்கால் மாணவர்களுக்கு இது ஒரு நிஜமான ‘லைஃப் செட்டில்’ வாய்ப்பு. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை (UG) ‘நான்-நீட்’ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

எந்தெந்தப் படிப்புகளுக்கு இந்த ஜாக்பாட்?
  • துணை மருத்துவப் படிப்புகள் (Paramedical): பி.எஸ்சி நர்சிங் (Nursing), பி.பார்ம் (B.Pharm), பிபிடி (BPT) மற்றும் லேப் டெக்னீசியன் போன்ற கோர்ஸ்கள்.
  • வேளாண் படிப்புகள் (Agriculture): பி.எஸ்சி அக்ரி (Agriculture) மற்றும் தோட்டக்கலை (Horticulture) படிப்புகள்.
  • தொழில்நுட்பப் படிப்புகள் (Engineering): பி.டெக் (B.Tech) – இதற்கும் நீட் தேவையில்லை பாஸ், பிளஸ் 2 மார்க் தான் மேட்டர்!.
  • கலை மற்றும் அறிவியல் (Arts & Science): பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் போன்ற அனைத்து பாரம்பரியப் படிப்புகளும் இதில் அடங்கும்.

மொத்த இடங்கள்: புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் யானம் பிராந்தியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இடங்களுக்கு இந்த ஒற்றைச் சாளர முறை (Single Window) மூலம் அட்மிஷன் நடக்கும்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29, 2026.

சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பித்த கையோட ஆன்லைன்லயே டாக்குமெண்ட்ஸ் சரிபார்க்கப்படும்.

ADVERTISEMENT
எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளமான www.centacpuducherry.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். உங்களது பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்யுங்கள். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், மற்றும் மிக முக்கியமாக ‘Resident Certificate’ (புதுச்சேரி குடியிருப்புச் சான்றிதழ்) ஆகியவற்றை ஸ்கேன் செய்து அப்லோட் பண்ணுங்க. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் (Credit/Debit/Net Banking) மூலமாகச் செலுத்த வேண்டும்.

புதுச்சேரி அரசு இடஒதுக்கீட்டைப் பெற ‘Residence Certificate’ மற்றும் ‘Community Certificate’ ரொம்ப முக்கியம் பாஸ்!. இதுல ஏதாச்சும் சொதப்பல் இருந்தா உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆக வாய்ப்பு இருக்கு, அதனால இப்போவே தாசில்தார் ஆபீஸ்ல வாங்கி ரெடியா வச்சுக்கோங்க. அப்ளை பண்ணும்போதே உங்களுக்குப் பிடிச்ச காலேஜ் மற்றும் கோர்ஸை முன்னுரிமை (Priority) அடிப்படையில் வரிசைப்படுத்துங்க. இதுதான் உங்க சீட்டை உறுதி செய்யும்.

ADVERTISEMENT

நீங்க குடுக்குற மொபைல் நம்பர் உங்க சொந்த நம்பரா இருக்கட்டும். ஏன்னா அட்மிஷன் அப்டேட்ஸ் எல்லாம் அதுக்குத்தான் எஸ்எம்எஸ்ஸாவே வரும். மே 29 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. கடைசி நேரத்துல சர்வர் ஹேங் ஆக வாய்ப்பு இருக்கு, அதனால இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க.

நீட் தேர்வு இல்லாமலேயே ஒரு நல்ல காலேஜ்ல சேர சென்டாக் ஒரு மெகா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. புதுச்சேரி மாணவர்களுக்கான இந்த ‘கோல்டன் டிக்கெட்’டைச் சரியா பயன்படுத்திக்கோங்க.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share