7 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56!

Published On:

| By christopher

PSLV-C56 launched

ஏழு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோ நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

மேலும்  வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்தநிலையில், சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘டிஎஸ்-சாா்’ (DS-SAR) எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ADVERTISEMENT

அத்துடன் சிங்கப்பூர் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட Velox-AM, ARCADE, SCOOB-II,  நியூஸ்பேஸ் என்ற சிங்கப்பூரின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட NuLIoN,

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட Galassia-2, மற்றும் சிங்கப்பூரின் அலியனா பிடிஇ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ORB-12 Strider என்ற ஆறு செயற்கைக்கோள்களும் வானிலை தகவல்களுக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 7 செயற்கைக்கோள் தான் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் இன்று காலை 6.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தொடர்ந்து கண்காணித்து வந்த இஸ்ரோ, ”PSLV-C56 ராக்கெட் ஏழு செயற்கைக்கோள்களையும் 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சாா் (DS-SAR) செயற்கைக்கோள் ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.

இத 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இதன் மூலம் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களையும் பெற முடியும்.

கடந்த ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 (PSLV-C55) ராக்கெட் மூலம் சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள்  வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது DS-SAR என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது பி.எஸ்.எல்.வி. சி.56 2ராக்கெட்டும் இஸ்ரோவால் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு: முதல்வரின் ட்வீட்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share