டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top ten tamil news today july 30 2023

பிஎஸ்எல்வி சி 56  வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 56  ராக்கெட் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ரேஷன் கடைகள் இயங்கும்!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக இன்று அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது!

கிருஷ்ணகிரியில் நேற்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மாங்கனி கண்காட்சியில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 435வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.180 ஆக விற்கப்படுகிறது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்!

பெண்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தீரன் சின்னமலை நினைவு நாள்!

தமிழகம் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

6 நாட்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 04.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சதுரகிரி செல்ல அனுமதி மறுப்பு!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரியில் காட்டுத்தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், இன்று அங்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

வெங்கட் பிரபுவின் அடுத்த ட்ரீட்!

கஸ்டடி படத்தினை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் அப்டேட்  இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்த்தால், உடல் எடை குறையுமா?

டிஜிட்டல் திண்ணை:‌ எம்.பி. தேர்தலுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel