தமிழக அரசின் சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு புதிய தலைவராக நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு தலைவர் மற்றும் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்ட ஆணையத்தின் தலைவர்- நீதிபதி டி. கிருஷ்ணகுமார், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி.
முழு நேர உறுப்பினர்கள்
- நீதிபதி ஆர்எம்டி டீக்கா ராமன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
- டி.கே.ராமச்சந்திரன் ஐஏஎஸ், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக அரசு
- ஏ. அருணகிரி, சட்டத்துறை முன்னாள் செயலாளர்
பகுதி நேர உறுப்பினர்கள்
- பி. மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட நீதிபதி
- ஆர். கோவிந்தராஜன் முன்னாள் மாவட்ட நீதிபதி
சட்டத்துறை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி- முழு நேர உறுப்பினர் செயலாளர்
இதன் பணிகள்
- நடைமுறையில் உள்ள சட்டங்களின் குறைபாடுகளை நீக்க பரிந்துரைத்தல்
- சமூக, பொருளாதார சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரை வழங்குதல்
- மத்திய- மாநில உறவுகள், மாநிலங்களிடையேயான உறவுகள் தொடர்பான பரிந்துரைகள் அளித்தல்
- நீதித்துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்த பரிந்துரைத்தல்
- தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மத்திய மற்றும் மாநில சட்டங்களை சீரமைக்கும் பரிந்துரைகள் அளித்தல்
- தமிழ்நாட்டின் சட்டங்கள், விதிகளை பகுப்பாய்வு செய்து பரிந்துரைத்தல்
தற்போதைய ஆணையத்தின் தலைவர், பகுதி நேர- முழு நேர உறுப்பினர்களின் பதவி காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள்.
