பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரை

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்ரல் 18) இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொகுதிகளை மறுவரையறை செய்ய 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 16ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால் இதனை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. அதாவது 326 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் வாக்கெடுப்பில் 278 எம்.பிக்களே மசோதாவை ஆதரித்தனர். இதனால் மசோதா தோல்வி அடைந்துள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்துள்ள நிலையில் பிரதமரின் உரை என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share