ADVERTISEMENT

அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தமா? – வெள்ளை அறிக்கை கேட்கும் பிரேமலதா

Published On:

| By Selvam

மின்வாரியம் தொடர்பாக அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (நவம்பர் 22) வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த ஆண்டுகளில் மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின் துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும்’ என்று சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு!

டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் பார்டர்  கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share