திமுக எம்.பி-க்கள் கூட்டம்!
திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 22) நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதுதொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
டைடல் பூங்கா திறப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
ரஜினி – சீமான் சந்திப்பு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கலைஞர் 100 வினாடி வினா!
கலைஞர் 100 வினாடி வினா அரையிறுதிப் போட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெறுகிறது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்!
பிரபுதேவா நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா, அசோக் செல்வன் நடித்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் சங்கீதா கல்யாண் நடித்துள்ள பராரி ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 10 பைசா உயர்ந்து ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.0.09 உயர்ந்து ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வளிமண்டல பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மோதல்!
மேற்கிந்திய தீவுகள், வங்கதேச அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
கச்சபேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில் திருக்குளத் தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி புதினா கூல் சூப்
‘அமரன்’ குழுவுக்கு 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாணவர்!