VIDEO: ‘கரப்பான் பூச்சிகள்’ மீது டெல்லி போலீஸ் தடியடி!

Published On:

| By Mathi

Police Lathi-Charge on 'Cockroach Janta Party' Protestors Over NEET Issues

டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (காக்ரோச் ஜனதா கட்சி Cockroach Janta Party CJP) டெல்லி போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நீட் (NEET) தேர்வு முறைகேடுகளை முன்வைத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சியினர் ‘சலோ சன்சாத்’ (நாடாளுமன்றத்தை நோக்கி) என்ற பெயரில் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் ராஜீவ் சௌக், ஜன்பத், படேல் சௌக், சென்ட்ரல் செக்ரட்டரியட் மற்றும் சேவா தீர்த்தம் ஆகிய ஐந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

ADVERTISEMENT

அதேநேரத்தில் போலீசாரின் தடையை மீறி ஆயிரக்கணக்கான காக்ரோச் கட்சி தொண்டர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குவிந்தனர். அத்துடன் அங்கிருந்து போலீஸ் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகவும் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் போலீஸ் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றதால் காக்ரோச் ஜனதா கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share