ADVERTISEMENT

விஜயை பார்க்க தடுப்புகளை மீறியவர்கள் மீது தடியடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இன்று விஜய், தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ரோடு ஷோவின் இடையே திருச்சி அந்தோனியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர் விஜய் மீண்டும் ரோடு ஷோவைத் தொடங்கினார். வழிநெடுகிலும் விஜய்யைப் பார்க்க தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாகத் திரண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விஜய்யைப் பார்க்கச் சென்ற சில இளைஞர்கள் தடுப்புகளை மீறினர். இதையடுத்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி இளைஞர்களை ஒழுங்குபடுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share