பிஎன்பி (PNB) பேங்க்ல மெகா ‘ஜாக்பாட்’! 30 ஆபீசர் பணியிடங்கள்

Published On:

| By Santhosh Raj Saravanan

pnb recruitment 2026 specialist officer engineering jobs apply online

என்னப்பா… பெரிய காலேஜ்ல கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சோம், ஆனா ஐடி கம்பெனியில எப்போ லே-ஆப் (Lay-off) வரும்னு பயந்துகிட்டே வேலை பாக்குறதா இருக்கே’ன்னு பீல் பண்றீங்களா?

இதோ பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) ஒரு மெகா ‘கோல்டன் டிக்கெட்’ வாய்ப்பைத் தட்டி விட்டுருக்கு. 30 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (Specialist Officer – Engineering) வேலை. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), 2026-ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புல மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக இருக்கு பாஸ்.

ADVERTISEMENT
கல்வித்தகுதி

நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் (BE/B.Tech) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக சிவில் (Civil), எலக்ட்ரிக்கல் (Electrical) போன்ற பொறியியல் பிரிவுகளில் படித்தவர்களுக்கு இங்க முன்னுரிமை உண்டு.

வயது வரம்பு: (01.01.2026 தேதியின்படி) குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். கவலைப்படாதீங்க பாஸ், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வழக்கமான வயது தளர்வு உண்டு.

ADVERTISEMENT
சம்பளம்

இதுதான் பாஸ் இந்த வேலையோட மெகா ஜாக்க்பாட்! ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (Scale-I) பதவியில் சேரும் உங்களுக்கு ஆரம்பத்திலேயே மாதம் 1,00,000 ரூபாய்க்கும் மேல் (Gross Salary) சம்பளம் மற்றும் இதர வங்கிச் சலுகைகள் கிடைக்கும். ஒரு இன்ஜினியருக்கு ஆரம்பத்திலேயே இது ஒரு சூப்பர் ‘கோல்டன் டிக்கெட்’ இல்லையா?

விண்ணப்பிக்க மே 15, 2026 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் (UR/OBC/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் GST, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி (SC/ST/PwBD) மாணவர்களுக்கு வெறும் 50 ரூபாய் மற்றும் GST மட்டுமே. இது நம்ம ஊரு பிள்ளைகளுக்கான ஒரு நல்ல சான்ஸ் பாஸ்!

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview) மூலம் ‘ரிசல்ட்’ அறிவிக்கப்படும்.

மே 15 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க பாஸ். கடைசி நேரத்துல சர்வர் ‘பிஸி’ ஆகி அப்ளிகேஷன் லோட் ஆகாம போறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. விருப்பமும் தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pnbindia.in என்ற முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிரைவேட் கம்பெனி வேலையை மட்டும் நம்பி இருக்காம, இந்த மாதிரி அரசு வங்கி வேலைகளுக்கும் முயற்சி பண்ணுங்க. 30 வேகன்சி தானேன்னு நினைக்காதீங்க, அந்த ஒரு இடம் உங்களுக்காகக் கூட இருக்கலாம். கஷ்டப்பட்டுப் படிச்சு இந்த ‘ஜாக்பாட்டை’ தட்டித் தூக்குங்க.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share