இளைஞர்கள் வங்கிக் கணக்கில் ரூ.15,000

Published On:

| By Kavi

மத்திய அரசின் PM-VBRY என்ற திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை  வரவு வைக்கப்படவுள்ளது.

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) திட்டத்தின் கீழ், ஜூன் 19 (நாளை)  பிரதமர் நரேந்திர மோடி ரூ.2,400 கோடி ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்தியாவின் முக்கிய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை உள்ளடக்கிய சுமார் 200 இடங்களில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக ‘வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ (ELI) திட்டம் என்று அழைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) என மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேலைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட் என்பது 99,446 கோடி ரூபாயாகும். 

ADVERTISEMENT

அதாவது  இத்திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

முதல் முறையாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் மாதாந்திர மொத்தச் சம்பளம் ரூ.1,00,000-க்குள் இருக்க வேண்டும். 

இந்த தகுதியின் கீழ் முதல்முறையாக பணிக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

முதல் தவணை 6 மாதத் தொடர் பணிக்குப் பிறகு வழங்கப்படும்.

இரண்டாவது தவணை பன்னிரண்டு மாத கால சேவையை முடித்து, நிதி அறிவுத்திறன் திட்டத்தை (Financial Literacy Programme) நிறைவு செய்த பிறகு வழங்கப்படும்.

நீங்கள் பணியில் சேர்ந்ததும், உங்கள் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது UMANG App-ஐப் பயன்படுத்தியோ உங்களது யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) உருவாக்க வேண்டும்.    நீங்கள் பணிபுரியும் நிறுவனம், PMVBRY Portal அல்லது PMVBRY EPFO Portal-ல் தங்களை ஒருமுறை பதிவு செய்து, புதிய பணியாளராகிய உங்கள் விவரங்களைச் சேர்க்க வேண்டும்.

இதன் மூலம் தகுதி வாய்ந்த முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு இந்த பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

இத்திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share