வைஃபை ஆன் செய்ததும், “தட்டிப் பார்த்தால் உதிரும் வேஷம்… தட்டிப் பார்த்தால் தெரியும் பாசம்!”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங் ப்ரோ.. ரஜினி (Rajini) பாட்டெல்லாம் பலமா இருக்கே..
அப்படியா… ரஜினியை மையமா வெச்சுதான் மறுபடியும் நிறைய பேச்சுகள் கிளம்பி இருக்குதே.. அங்கிட்டு அண்ணாமலை ஆதரவாளர்கள் ரஜினி படத்தை போஸ்டர்ல போடுறாங்க.. ரஜினி படத்தை போடக் கூடாதுன்னு ரசிகர் நற்பணி மன்றம் அறிக்கை விடுது.. அப்புறமா திடீர்னு பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில ரஜினியை சந்திச்சு பேசியிருக்காங்க..
ஆமாங்க ப்ரோ.. ரஜினிகாந்தை பாஜக லீடர்ஸ் சந்திச்சுருக்காங்களே.. என்ன விஷயமாம்?
இதை பத்தி பாஜக சீனியர்ஸ் கிட்ட விசாரிச்சேன் ப்ரோ… அவங்க நம்ம கிட்ட பல விஷயங்களை ஷேர் செஞ்சிருக்காங்க.. நம்மிடம் பேசிய பாஜக சீனியர்ஸ், “ரஜினிகாந்தை நேத்துக்கு முதல் நாள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பிரசார பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ்தான் சந்திச்சாங்க.. 1 மணிநேரம் இந்த சந்திப்பு நடந்துச்சு..

இந்த சந்திப்புல, பிரதமர் மோடியோட 12 ஆண்டு சாதனைகளை விளக்குற தமிழ், இங்கிலீஷ் புத்தகங்களை ரஜினிகாந்த்கிட்ட கொடுத்து போட்டோ எடுத்துகிட்டாங்க..
அதுக்கு அப்புறமா பாஜக லீடர்ஸும் ரஜினியும் பல விஷயங்களை மனம் விட்டு பேசுனாங்க..
அண்ணாமலையை பத்தி பேச்சு வரும்போது, ”அவங்க ஆதரவாளர்கள் உங்க போட்டோ போட்டு போஸ்டர் போட்டிருக்காங்க.. நீங்க ஆதரிக்காதீங்க”ன்னு நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறார்..

அதுக்கு ரஜினிகாந்த், “ரசிகர் மன்றத்துல இருந்து 2, 3 நாளைக்கு முன்னாடியே ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கோம்”னு சொன்னார்..
நயினாரைத் தொடர்ந்து ரஜினி கிட்ட அரவிந்த் மேனன், “இந்தியாவிலேயே கடந்த 6 வருஷத்துல அண்ணாமலைக்கு மாதிரி பாஜக எந்த ஒரு லீடருக்கும் எலிவேஷன் செய்யலை..
அண்ணாமலையோட நடைபயணத்துக்கு மட்டுமே ரூ150 கோடி கட்சி செலவு செஞ்சிருக்கு..
அவரோட வார் ரூமுக்கு மாசம் ரூ30 லட்சம் செலவு செஞ்சிருக்கோம்.. இப்படி எல்லாம் பாஜக மேலிடம் யாருக்கும் செஞ்சது இல்லை.. ஆனா அவரு இப்படி முடிவு எடுத்துட்டு வெளியே போயிட்டாரு”ன்னு சொன்னார்..
இதை எல்லாம் கேட்டுகிட்ட ரஜினிகாந்த், “பாஜக இங்கே இவ்வளவு பெரிய தோல்வியை சந்திச்சுருக்கு.. இந்த நிலைமையில அண்ணாமலை கட்சியைவிட்டு போயிருக்க கூடாது”ன்னார்..
இதுக்கு அப்புறமா சிஎம் விஜய் பத்தி பேச்சு வந்தது.. விஜய்யை பத்தி சில விஷயங்களை ஓபனா சொன்னார் ரஜினிகாந்த். அதாவது, “விஜய் ரொம்ப சென்சிட்டிவா இருப்பார்.. பொது இடத்துல அவரை குறை சொல்றதை விரும்பவும் மாட்டாரு..
ஷூட்டிங் ஸ்பாட்டில நானோ, கமலோ, ஒரு சீன் எடுக்கும் போது இப்படி செஞ்சா நல்லா இருக்குமா? அப்படி செய்யலாமா?ன்னு அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் உட்பட எல்லாருகிட்டேயும் டிஸ்கஷன் செய்வோம்.. தேவைப்பட்டா உடனே மாத்திகிட்டு திரும்பவும் நடிப்போம்..

ஆனா விஜய் அப்படி இல்லை.. ஷூட்டிங்கில டைரக்டர் சொல்றதை அவர் செஞ்சுடுவாரு… அதுல கரெக்ஷன் சொல்றதை விரும்பமாட்டார்.. அவரா வீட்டுக்கு போய் அந்த ஷார்ட்டை பார்த்துட்டு மாத்தனும்னு நினைச்சாருன்னாதான் வேற எடுக்கலாம்னு சொல்வாரு.. அவரா விரும்பினாதான் அதை செய்ய முடியும்.. இதுதான் அவரோட கேரக்டர்.. இன்னைக்கு அரசியல்ல நல்ல உயரத்தை அடைஞ்சிருக்காரு.. அவருக்கு ஆல்ட்டர்நேட்டிவ்வா இப்ப யாரு இருக்காங்க?”ன்னு கேட்டார் ரஜினிகாந்த்..
அப்ப கராத்தே தியாகராஜன் உட்பட எல்லாரும், “நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது சார்?”ன்னு வெளிப்படையாக கேட்க ரஜினிகாந்தோ, “கையெடுத்து கும்பிட்ட”படி பதில் சொல்லலை..
ஆனாலும் விடாமல், “நீங்க ரீ திங் பண்ணுங்க சார்”னு அழுத்தமாக கோரிக்கை வெச்சாங்க..
அண்ணாமலை, விஜய்யை தொடர்ந்து அஜித் பத்தியும் பேசப்பட்டது.. அஜித்தோட அரசியல் விருப்பம் பத்தியும் டிஸ்கஷன் செஞ்சாங்க.. அதாவது அதிமுகவில அஜித் சேருவாருன்னு முன்னாடி எல்லாம் செய்தி வந்துச்சு இல்லையா அதை பத்தியும் பேசினாங்க..
அப்ப ரஜினிகாந்த், “அஜித்தைப் பொறுத்தவரைக்கும் இந்தியாவுக்கே வர விரும்புறதில்லை போல.. ரேஸ் அதுஇதுன்னு வெளிநாட்டுலதான் ரொம்ப நாள் இருக்கிறாரு…”ன்னு சொன்னார்..

இதுக்கு அப்புறமா நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் எல்லாரும் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. இந்த பேரில் “கருணாநிதி”- அப்படிங்கிறது ஸ்டாலினுக்கு பாசிட்டிவ்.. ஆனா ஜோசப் விஜய் அப்படிங்கிற பேரே விஜய்க்கு நெகட்டிவ்தான்.. இந்துக்கள் ஓரணியில நிக்கிறதுக்கு சான்ஸா இருக்கும்”னு சொல்ல ரஜினிகாந்த், எந்த கமெண்ட்ஸும் சொல்லாம இருந்தார்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
