பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பழனி அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 6-ம் தேதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலம் பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவர் பெயரில், போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்குத் தடையற்ற விற்பனைப் பத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த, கூடுதல் பொறுப்பில் இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் உள்ளிட்டோர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபி-சிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட பத்திரப் பதிவு துறை பதிவாளர் சசிகலா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
