’கரண்ட் கட்’-க்கு நடுவே 1 மணி நேரம் கலந்துரையாடிய ப.சிதம்பரம்.. திருமாவளவன் நெகிழ்ச்சி!

Published On:

| By Mathi

P. Chidambaram Discussion with Thirumavalavan

’மின்சாரம் துண்டிக்கப்பட்ட’ நிலையிலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துடன் 1 மணிநேரத்துக்கும் மேலாக கலந்துரையாடியதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் (Thirumavalavan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் தமது எக்ஸ் பக்கத்தில், “விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ஜூன் 19 மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது.

ADVERTISEMENT

அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், ‘ஏசி’ இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share