கோவில் நிதி ரூ.246 கோடி.. 22 கட்டுமானப் பணிகள் ரத்து- ஏன்? முழு விவரம்!

Published On:

| By Mathi

HRCE Temples

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை (HRCE) மேற்கொள்ள இருந்த 22 கட்டுமானப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு சட்டமன்ற அறிவிப்பின் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என்றும் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட W.P.(MD) No. 21066, 22395, 22510, 22517 & 22563 of 2025 மற்றும் W.P.(MD) No.5893, 15498, 17666, 21966 & 21967 of 2025 நாள்.19.08.2025 மற்றும் 28.08.2025 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் திருக்கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில் அவ்வறிவிப்புகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு, திருக்கோயில்களிடமிருந்து முன்மொழிவுகள் வரப்பெற்றது என்றும் எனவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலும் திருக்கோயில் அறங்காவலர் குழு மற்றும் தக்கார் தீர்மானத்தின்படியும், இணை ஆணையர்களின் முன்மொழிவுகளை ஏற்றும் திருக்கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்கு பின்னர், அதனை ஏற்று கீழ்க்காணும் திருக்கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்து அரசு ஆணையிடுகிறது.

ADVERTISEMENT

ரத்து செய்யப்பட்ட 22 கட்டுமான பணிகள் (HRCE PROJECTS)

  1. திருவாரூர் கபிலேஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
  2. திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
  3. திருவாரூர் மாரியம்மன் திருக்கோயில் – திருமண மண்டபம்
  4. பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
  5. திண்டுக்கல் வடமதுரை சௌந்தராஜபெருமாள் திருக்கோயில் – திருமண மண்டபம்
  6. திண்டுக்கல் நிலக்கோட்டை நடராஜர் திருக்கோயில் – திருமண மண்டபம்
  7. உத்தமபாளையம் சின்னமனூர் பூலாந்தீஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
  8. மதுரை ஒத்தக்கடை கோதண்டராமசாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
  9. கோயம்புத்தூர் தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
  10. நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில் – திருமண மண்டபம்
  11. புதுக்கோட்டை திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் திருக்கோயில் – திருமண மண்டபம்
  12. நீலகிரி உதகை மாரியம்மன் திருக்கோயில் – வணிக வளாகம்
  13. நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
  14. திருவண்ணாமலை தேசூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில் – வணிக வளாகம்
  15. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உபகோவிலான வல்லப விநாயகர் திருக்கோயில் – வணிக வளாகம்
  16. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் – வணிக வளாகம்
  17. சென்னை பூங்கா நகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
  18. சென்னை பூங்கா நகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
  19. சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் – வணிக வளாகம்
  20. தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோயில் – வணிக வளாகம்
  21. தென்காசி காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
  22. சென்னை புழல் திருமூலநாதசுவாமி திருக்கோயில் – வணிக வளாகம்
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share