ஜெயலலிதா கூட்டத்தில் மீண்டும் ஒருவர் பலி

By Balaji

|

Published on 20 Apr 2016, 12:00 AM

ஜெயலலிதா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்த பச்சையப்பன் என்ற தொண்டர் பலியடைந்துள்ளார். தண்ணீர் கேட்டு தடுப்புகளைத் தாண்டிச் செல்ல பச்சையப்பன் அனுமதி கேட்டபோது போலீசார் மறுத்திருக்கிறார்கள். இதனால், பச்சையப்பன் மயக்கமடைந்துள்ளார். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், வழியிலேயே பச்சையப்பன் பலியாகிவிட்டார். கடுமையான வெயில் காரணமாகத்தான் அவர் பலியடைந்ததாகக் கூட்டத்திற்கு வந்த சக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மாலை 4 மணி கூட்டத்திற்கு காலை 10 மணி அளவிலேயே அழைத்து, வெட்ட வெளியில், கடும் வெயிலில் அடைக்கப்பட்ட தடுப்பு வளையத்துக்குள் அமரச்செய்திருக்கின்றனர். முறையான தண்ணீர் வசதியும் செய்து தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மயக்கமுற்ற பச்சையப்பன், உயிரிழந்துவிட்டார். சேலத்தில் இன்று 106 டிகிரி சென்டிகிரேட் வெயில் அடித்திருக்கிறது. வெப்ப அலைகள், கடுமையான வெயில் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுக கூட்டங்களில் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா பங்கேற்ற விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இரண்டு பேர் பலியடைந்தனர். அதேபோல், அருப்புக்கோட்டை கூட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். தற்போது, மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது கடும் விமர்சனங்களைக் எழுப்பியிருக்கிறது. ஜெயலலிதா பிரச்சாரம் நடந்த இடம் கோவை நெடுஞ்சாலையில் உள்ளது. அங்கு அதிமுக கொடி கட்டாத வாகனங்களைத் தவிர வேறு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel