தவெகவைச் சேர்ந்த நிதியமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். தற்போது நிதியமைச்சராக உள்ளார்.
இதற்கிடையே தேர்தல் சமயத்தில் மரிய வில்சன் தனது தம்பி குடும்பத்தினரை கட்டையால் தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது.
அதாவது, தொழில் போட்டி காரணமாக உடன் பிறந்த சகோதரர் மரி க்ளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியைத் தாக்கியதாக மரிய வில்சன் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மரிய வில்சன் மீது , வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை அவமானப்படுத்துதல், கொள்ளை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட போதும், அவர் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரிய வில்சன் நாளை கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என இன்று (ஜூலை 3) உத்தரவிடப்பட்டுள்ளது.
