கலைஞர் குறித்து பேச என்ன தகுதி-எடப்பாடிக்கு ஓபிஎஸ் பதிலடி?

Published On:

| By Pandeeswari Gurusamy

Edappadi should resign : ops warning

கலைஞர் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

போடியில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஏப்ரல் 5) கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “எடப்பாடி பழனிசாமிக்கு கலைஞர் குறித்து பேசுவதற்கான தகுதி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

“கலைஞரின் அரசியல் வாழ்க்கை 11 வயதில் தொடங்கியது. பெரியாரின் சிஷ்யனாகவும், அண்ணாவின் தம்பியாகவும் திகழ்ந்த அவர், எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொண்டபோதும் தாங்கிக் கொண்டு, தமிழக மக்களுக்கு சமூக நீதியை நடைமுறைப்படுத்தியவர். அப்படிப்பட்டவரைப் பற்றி நீங்கள் பேசலாமா? நீங்கள் எப்போது, யாரால் அரசியலுக்கு வந்தீர்கள்? அரசியலில் உங்களுக்கு சரித்திரமே இல்லை. சிறை செல்ல வேண்டியிருந்த எடப்பாடி பழனிசாமியை செல்வகணபதியும் முத்துசாமியும் தான் காப்பாற்றினார்கள்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share