ஊட்டி: ”வெள்ளி மண்” திருட்டு- தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

Published On:

| By Mathi

Ooty: 6 Arrested for 'Silver Soil' Theft, Including TVK Functionary

ஊட்டியில் “வெள்ளி கலந்த மண்” திருட்டு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் சுரேஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் (ஊட்டி) பல ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடப்பட்டது. அந்த வளாக மண்ணில் வெள்ளி மற்றும் கனிமங்கள் கலந்து இருக்கிறது என சட்டவிரோதமாக திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று ஜூலை 15-ந் தேதி இரவு, 3 டன் வெள்ளி கலந்த மண் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மண் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share