முடி உதிர்தல் பிரச்சனையை போக்கும் வெங்காயம், இஞ்சி, வெந்தயம் ஹேர் மாஸ்க் தயாரிப்பது குறித்துப் பார்க்கலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், மாசுபாடு காரணமாக இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகளவில் முடி கொட்டுவதை காண முடிகிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு விலை உயர்ந்த ஷாம்பூக்களும் கிரீம்களும் பலனளிப்பதில்லை என்று பலர் கவலைப்படுகிறார்கள். இனி கவலை வேண்டாம். நம் சமையலறையில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டே நமது முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற முடியும். குறிப்பாக வெங்காயம், இஞ்சி மற்றும் வெந்தயம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க் (hair mask), முடி பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
முடியை பாதுகாக்கும் ஹேர் மாஸ்க்கை செய்வது மிகவும் எளிதானது. ஒரு வெங்காயம், சிறிதளவு இஞ்சி, மற்றும் அரைத்த வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில், வெங்காயம் மற்றும் இஞ்சியை நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அந்த சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி (Onion Hair Mask) அரைத்த வெந்தயத்தை சேர்த்து விழுதாக மாற்ற வேண்டும்.
தங்கள் தலைமுடிக்கு கூடுதல் ஈரப்பதத்தையும் பளபளப்பையும் விரும்புபவர்கள், இந்தக் கலவையுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல்லை கூட சேர்க்கலாம். தயாரிக்கப்பட்ட மாஸ்க்கை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை தடவி, 30 முதல் 40 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். அதன் பிறகு மென்மையான ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலையை அலசலாம்.
ஹேர் மாஸ்க் பயன்கள்
வெங்காயத்தில் உள்ள கந்தகம், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (onion increases scalp blood flow) உச்சந்தலையைச் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், பொடுகை வேரிலிருந்து நீக்குகின்றன. வெந்தயத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இவை முடிக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. ஹேர் மாஸ்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வர முடியில் நல்ல மாற்றத்தை நீங்களே உணர முடியும்.
உணவு முறையும் அவசியம்
எந்தவொரு வீட்டு வைத்தியமும் ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. முடியின் ஆரோக்கியம் என்பது நாம் சொன்ன ஹேர் மாஸ்குகளை மட்டும் (Hair also needs nutrition) சார்ந்திருக்கவில்லை, மாறாக நாம் உண்ணும் உணவு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் சார்ந்துள்ளது. வழக்கமான முடி பராமரிப்புடன், சத்தான உணவு மற்றும் போதுமான தூக்கம் இருக்கும்போது மட்டுமே முடி அதன் இயற்கையான பளபளப்பைப் பெறுகிறது.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் முடி வளர்ச்சி
உங்களும் முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் (Hair thinning treatment) போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டால், நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஹேர் மாஸ்க்கை முயற்சி செய்யலாம். ஆரோக்கியமான முடி உங்கள் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒவ்வொருவரின் முடி வகையும் வேறுபடுவதால், இந்த மாஸ்க்கை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது சிறந்தது.
