எடை குறைப்பு முதல் செரிமானம் வரை.. சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ..!

Published On:

| By Santhosh Raj Saravanan

weight loss to digestion bottlegourd juice benefits

சுரைக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி, அதனை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுரைக்காய் என்பது நமக்கு எளிதாக கிடைக்கும் காய்கறிகளில் முக்கியமானதாக உள்ளது. பலரும் சுரைக்காயை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பதை காண முடியும். ஆனால், சுரைக்காயில் ஏராளமான நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கோடைக் காலத்தில் நீரிழப்பை தடுப்பதில் சுரைக்காய் மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக கோடை காலத்தில், சுரைக்காய் சாறு (bottle gourd juice) உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளன. சுரைக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி, அதனை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்

சுரைக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி?

புதிய சுரைக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தோலை உரித்து, அதைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை மிக்சியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து (How to make bottle gourd juice) அரைக்க வேண்டும். பிறகு அதனை  வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கலாம். சுரைக்காய் கசப்பாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT
கோடைக்கு ஏற்ற பானம் சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இது கோடைக்காலத்தில் (summer health drink) உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. சுரைக்காய் சாற்றில் 90 சதவீதத்துக்கும் மேல் நீர் உள்ளதால் இது உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கிறது. ஆகவே, கோடைக்கு ஏற்ற சிறந்த ஜூஸாக சுரைக்காய் இருக்கக் கூடும்.

 உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது

சுரைக்காய் சாற்றில் (bottle gourd for weight loss)  கலோரிகள் குறைவாக இருப்பதால், இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்து, உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது தொப்பையைக் குறைக்க மிகவும் ஏற்றது. சுரைக்காய் சாறு வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது

ADVERTISEMENT
செரிமானத்தை மேம்படுத்துகிறது

சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் (digestion) மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சுரைக்காய் சாறு இதயத்திற்கு நன்மை அளிப்பதுடன்,கொழுப்பைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

சுரைக்காயில் பொட்டாசியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் (blood pressure control) கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தைத் தூய்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.எப்போதும் புதிய, இனிப்பான சுரைக்காயிலிருந்து சாறு தயாரிக்க வேண்டும். சுரைக்காய் கசப்பாக இருந்தால், அதைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல வெறும் வயிற்றில் அதிக அளவில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். நாள்தோறும் 1 டம்ளர் என்ற அளவுக்கு சுரைக்காய் ஜூஸை குடிப்பது நன்மை அளிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share