கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி?.. இதோ சூப்பர் டிப்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

exercise and diet tips for keep your liver healthy

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு உள்பட சில அன்றாட பழக்க வழக்கங்கள் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் நாள் முழுவதும் சோர்வாகவும், பலவீனமாகவும், ஆற்றல் குறைவாகவும் உணர்கிறார்கள். ஆனால்.  இது சாதாரண சோர்வு என்று நினைத்து பெரும்பாலும் புறக்கணித்துவிடுகிறார்கள். ஒருவேளை இது கல்லீரல் பிரச்னையின் (liver problem symptoms) அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

ADVERTISEMENT

கல்லீரல் என்பது இதயம், சிறுநீரகம் போலவே முக்கியமான உறுப்பாகும்.

கல்லீரல் உடலில் பல முக்கியப் பணிகளைச் செய்கிறது. அது உணவைச் செரிக்கவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேமிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பராமரிக்கவும் உதவுகிறது. கல்லீரல் (Liver functions) அதிகப்படியான அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, ​​அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அது உடல் முழுவதையும் பாதிக்கிறது.

ADVERTISEMENT
இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்

காலையில் எழுந்திருக்கும்போது சோர்வாக உணர்வது, சிறிதளவு உடற்பயிற்சி செய்தாலே மூச்சுத் திணறல் அல்லது நாள் முழுவதும் ஆற்றல் இல்லாமல் இருப்பது ஆகியவை கல்லீரல் பிரச்னையின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம். இதேபோல தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், மேல் வயிற்றில் வலி, அல்லது அடர் நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், கல்லீரல் செயல்பாட்டுப் பரிசோதனை (Liver Function Test) செய்துகொள்வது நன்மை பயக்கும்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

உணவில் எப்போதும் பச்சை காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை (liver healthy) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ADVERTISEMENT
நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது கல்லீரலைச் சுறுசுறுப்பாக வைத்து, உடலில் ஆற்றலை (Exercise daily) பராமரிக்க உதவுகிறது. துரித உணவுகள், அதிகப்படியான பொரித்த உணவுகள் மற்றும் மது அருந்துதல் ஆகியவை கல்லீரலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆகவே,  இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

சீக்கிரம் உறங்கச் சென்றுவிட வேண்டும்

சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வதும், அதிகாலையில் எழுவதும் ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க (maintain a healthy body) உதவுகிறது. உங்கள் அன்றாட வழக்கத்தில் தியானம் மற்றும் யோகாவை சேர்த்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் நன்மை பயக்கும். ஆகவே, இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share